Tuesday, November 27, 2007

இணையத்தின் பண மொழி!


http://www.tamil-tutor.blogspot.com/


இணையத்தின் பண மொழி! Payment Sytems That Make More Money
இணையத்திற்கென்றே தனி பணமொழி உண்டு! "இதென்னடா புதுசா பணமொழி?" என யோசிக்கிறீர்களா? இங்கு நான் பணமொழி என்று கூறியிருப்பது இணையத்திற்கே உரிய சில சொற்களாகும்.
இதை எளிதாக புரிந்து கொள்ள வேண்டுமானால், "சம்பளம்" என்போமே அது தான்! "சம்பளம்" என்பது மிகமிக எளிய சொல். ஆனால் அதிலும் பல வகைகள் உண்டல்லவா? தினக்கூலி, வாரக்கூலி, செய்கூலி, மாதச்சம்பளம் என கூறுகிறோம். அதே போன்றுதான் இணையத்திலும் சம்பளத்தை (கூலி:-) பல வகைகளில் தருகிறார்கள்.
இணையத்தின் மூலம் எப்படி பணம் சம்பாதிப்பது? அதற்கு என்னென்ன வழிமுறைகள் உண்டு என்பது என்னுடைய முந்தைய பதிவுகளில் விளக்கி இருந்தேன். (சரி, இணையத்தில் எப்படி சம்பாதிப்பது எப்படி என உங்களுக்கு தெரியும் என்றால், இந்த அறிமுக பத்திகளை விட்டு விட்டு, கீழே உள்ள செய்திக்கு வரவும்).
இணையத்தில் அப்லியேட் ப்ரோகிராம் மூலம் இன்று பெரும்பாலானோர் பணம் சம்பாதிக்கிறார்கள். இணையத்தில் பல்வேறு அப்லியேட் ப்ரோகிராம்கள், தங்கள் அப்லியேட்டுகளுக்கு பல்வேறு அடிப்படையில் பணம் தருகிறார்கள். (எ.கா) ஒரு அப்லியேட் ப்ரோம்கிராமில், உங்கள் வெப்சைட்டில் காட்டப்படும் விளம்பரங்களுக்கு பணம் கிடைக்கும், மற்றொன்றில் ஒரு பொருளை விற்று தந்தால் பணம் கிடைக்கும் (This is called Payment Systems). எனவே இவைகளை, செயலுக்கு ஏற்ப வகுக்கப்பட்டிருக்கின்றன. அவைகளை இங்கு பார்ப்போம்.
இந்த வார்த்தைகளை நீங்கள் பரவலாக இணையத்தில் பார்த்திருப்பீர்கள்.
CPC - என்பது Cost Per Click எனப்படும்.
அப்லியேட் ப்ரோக்கிராம்களில் வெப்சைட்டில் காட்டப்பட்டிருக்கும் விளம்பரம் ஒவ்வொரு முறையும் கிளிக் செய்யப்படும் போதும் கிடைக்கும் பணத்தை குறிக்கிறது.
CTR - என்பது Click Through Rate எனப்படும்.
விளம்பரம் ஒன்று ஒவ்வொரு நூறு முறை காட்டப்படும் போது, எத்தனை முறை பயனாளரால் கிளிக் செய்யப்படுகிறது என்பதைக் குறிக்கிறது. (எ.கா.) CTR 10 % என்றால், விளம்பரம் நூறு முறை காட்டப்பட்டதில், 10 முறை கிளிக் செய்யப்பட்டுள்ளது என அர்த்தம்.
Ad Impression: எத்தனை முறை ஒரு பக்கம் அல்லது விளம்பரம் காட்டப்பட்டுள்ளது என்பதைக் குறிக்கும்.
Pay Per Lead: இந்த முறையில், எத்தனை முறை பயனாளர் ஒருவரை விளம்பரதாரர் இணையப்பக்கத்திற்கு இட்டு சென்று உள்ளார்கள் என்ற அடிப்படையில் பணம் கிடைக்கும்.
Pay Per Sale: ஒவ்வொரு விற்பனைக்கும் கிடைக்கும் பணம்.
CPA (Cost Per Action) - அதவாது, இணையப்பயனாளர் செய்யும் ஒவ்வொரு வேலைக்கும் பணம் கிடைக்கும். (எ.கா.) பக்கங்களை நிரப்புதல், பார்வையிடுதல்
CPL - ஒரு விளம்பரத்தை ஒரு இணையப்பக்கத்தில் காட்ட ஆகும் செலவு, விளம்பரம் எத்தனை “Leads” ஏற்படுத்துகிறது என்பதை பொறுத்து அமைகிறது.
CPM ( Cost Per Thousand Impression) - ஒரு விளம்பரம் 1000 தடவை காட்டப்படாமல் ஆகும் செலவைக் குறிக்கும்.
Contextual Marketing - இதில் ஒரு பொருளை விற்க, அந்தப் பொருளைப்பற்றி கூறும் இணையப்பக்கத்தில் வைத்தல்.
எனவே மேற்கூறியுள்ள வகைகளில் அப்பிலியேட் ப்ரோக்கிராம்களை வரிசைப்படுத்தலாம்.
ஊசி என்ற வலைப்பதிவாளர் தன்னுடைய வலைப்பதிவில் அழகாக இந்த அடிப்படையில் பிரித்து வரிசைப்படுத்தி உள்ளார். அருமையான வேலை! சென்று பார்வையிடுங்கள்.
கவனம் : சில adult network- யும் பட்டியலிடப்பட்டு இருக்கும், ஆனால் அருகில் எச்சரிக்கை செய்தியையும் கூறியிருக்கிறார்.
உங்கள் வலைப்பூக்களுக்கு ஏற்ப, அல்லது சுலபமாக பணம் கிடைக்கும் அப்பிலியேட் ப்ரோக்கிராமில் (மேற்கூறிய Payment Systems படி தேர்வு செய்யுங்கள்) சேர்ந்து பணம் சம்பாதியுங்கள். வாழ்த்துக்கள்!
உங்கள் கருத்துக்களை கமெண்ட்ஸ் பகுதியில் தரவும்!(:-))

Some Useful Links:
வலைப்பதிவுகள் மூலம் பணம் சம்பாதிக்க புதிய முறை
பிலாகுகளை அமைத்து பணம் பெறுவது எப்படி?
முதலீடே இல்லாமல் லாபம் குவிக்கும் வேலை!
உங்கள் இணையத்திற்கு மக்கள் வரத்து!
மெட்டா டேகுகள்

வலைப்பதிவாளர்களுக்கு அறிவுச் சுரங்கம்
வலைப்பதிவுகள் மூலம் பணம் சம்பாதிக்க புதிய முறை Make Money By Pay Per Post
வலைப்பதிவுகளானலும் சரி, இணையதளங்களானாலும் சரி - இணையப்பயனாளர்கள் விளம்பரங்களை பார்ப்பது கூட இல்லை. ஆனால் விளம்பரங்களையே வலைப்பதிவுகளை போல எழுதினால் எப்படி இருக்கும்? இந்த கேள்விக்கு பதில் கிடைத்தாகி விட்டது!
முதலில் www.ReviewMe.com என்ற இணையதளத்திற்கு சென்று உங்கள் வலைப்பதிவுகளை பதிவு செய்து கொள்ளவும். அடுத்தது, ஒரு குறிப்பிட்ட விளம்பரதாரர் பொருளுக்கோ அல்லது சேவையைப் பற்றியோ விமர்சனங்களை உங்கள் வலைப்பதிவுகளில் எழுதவும். நீங்கள் ஒவ்வொரு முறையும் எழுதும் போதும் உங்களுக்கு சுமார் 25 டாலர் வரை பணம் கிடைக்கும் (This is called Pay Per Post
வலைப்பதிவாளரான உங்களுக்கு இதேன்ன கஷ்டமா? உங்களுக்கு முழு சுதந்திரமும் விமர்சிப்பதில் உண்டு. பாசிட்டீவ் மற்றும் நெகட்டீவ் கருத்துகளையும் கூறலாம்.
மேலும் ஒரு செய்தி : நீங்கள் எழுதும் மொழி எதுவாகவும் இருக்கலாம்! உங்கள் வலைப்பதிவுகளை பதிவு செய்யாமல் தள்ளுபடியானல் கவலை வேண்டாம், உங்கள் வலைப்பதிவை கொஞ்சம் பேமஸ் ஆக்கிவிட்டு, நல்ல மக்கள் வரத்தோடு மீண்டும் சென்று சமர்பியுங்கள்! இன்றே செல்வீர்
ReviewMe க்கு!

பிலாகுகளை அமைத்து பணம் பெறுவது எப்படி?
வலைப்பதிவாளர்களுக்கு அறிவுச் சுரங்கம்
மெட்டா டேகுகள்
உங்கள் இணையத்திற்கு மக்கள் வரத்து!
முதலீடே இல்லாமல் லாபம் குவிக்கும் வேலை!
வலைப்பதிவாளர்களுக்கு அறிவுச் சுரங்கம் Improve Your Blogger Knowledge Base
வலைப்பதிவு யுத்திகள் நாளுக்கு நாள் மாறி வருகிறது. இன்று இருக்கும் ஒரு நுட்பம் நாளைக்கு பழையதாகி விடுகிறது. எனவே மாறி வரும் வலைப்பதிவு உலகில், உங்கள் வலைப்பதிவுகள் கால் பதிக்க வலை உலகில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
1. டேலிஷியஸ்
‘ யாம் பெற்ற இன்பத்தை யாவரும் பெறுக’ என்பதை போல, இனைய உலகத்தில், தனக்கு பிடித்த, மிகச்சிறந்த பார்வைக்கு வைப்பது தான் இந்த தளத்தின் சேவையாகும். பதிவு செய்த தளங்களை ஒரு தலைப்பின் கீழ் கோர்ந்து வைக்கலாம். நீங்கள் சேர்த்த உங்கள் விருப்ப தளங்களுக்கு எத்தனை பேர் உங்களை போல கோர்த்து உள்ளனால் என்பதும் தெரியும். எனவே நீங்கள் விரும்பும் இணையதளத்தில் பெருமையையும் அறியலாம். மறுபக்கம், ஒவ்வொரு தலைப்பின் கிழும் பதிவு செய்யப்பட்டிருக்கும், உங்களுக்கு தெரியாத இனையதளங்களை பற்றி அறிந்து கொள்ளுங்கள். இணைய உலகத்தின் சமிபத்திய மாற்றங்களை தெரிந்த கொள்வீர்.
2. டெக்னோராட்டி:
இது விருப்ப இணையதளங்களை கோர்த்து கொள்ளவும், பார்வையிடம் மாத்திரம் இல்லாமல், மிகப் பெறும் வலைப்பதிவு திரட்டியாகவும் உள்ளது. இங்கு வலைப்பதிவுகளையும், அவற்றின் வலைப்பதிவாளர்களின் விருப்ப தளங்களையும் பார்வையிட முடிகிறகிறது. இங்கும் ஒவ்வொரு தலைப்பின் கீழும் வலைப்புக்கள் பிரித்து தரப்படுகிறது.
3. பிலாக் லைன்ஸ்:
சரி உங்களுக்கு பிடித்தமான தளங்கள் கைநிறைய கிடைத்திருக்கிறது. மேலும் இத்தளங்கள் ஒவ்வொரு முறையும் இந்த தளங்கள் புதுப்பிக்கப்படும் முன்பும் அவற்றை மீண்டும் மீண்டும் சென்று பார்க்க முடிவதில்லை. இந்த பிரச்சனைகளை தீர்க்கவே பிலாக் லைன்ஸ் உள்ளது. ஒரு முறை உங்களுடைய விருப்ப தளங்களை இங்க பதியவும், மற்றவைகளை மறந்துவிடுங்கள். பிலாக் லைன்ஸ் உங்கள் விருப்ப தளங்கள் புது பிக்கப்படும் போது அவற்றை கண்காணித்து பது செய்திகளை வாசிக்க தருகிறது.
மற்ற சில தளங்களும் இதே சேவையை தருகின்றன, இதிலென்ன விசேஷம் எனக் கேட்கலாம் இருக்கிறது. பயன்படுத்துவோர் எளிதாக தங்களது விருப்ப தளங்களை ஒழுங்கு படுத்தும் பளேலிங்டு வசதி உள்ளது. அவர்களே வெவ்வேறு தலைப்பின் கீழ் பல இணையத்தங்களையும் எற்கனவே பிரித்து வைப்படுத்தி உள்ளனர். அவற்றில் இருந்தும் உங்களுக்கு பிடித்த வற்றை தேர்ந்தேடுத்து வாசிக்கலாம். எனவே இன்றே இந்த சேவைகளை பயன்படுத்துவீர்! உங்கள் ‘அறிவுச்செல்வம்’ நாளுக்கு நாள் வளர்பதைக் காண்பீர்கள். வாழ்த்துக்கள்!

வலைப்பதிவுகள் மூலம் பணம் சம்பாதிக்க புதிய முறை
மெட்டா டேகுகள்
பிலாகுகளை அமைத்து பணம் பெறுவது எப்படி?
உங்கள் இணையத்திற்கு மக்கள் வரத்து!
முதலீடே இல்லாமல் லாபம் குவிக்கும் வேலை!
மெட்டா டேகுகள் How to use the meta tags to get Search engine trafific
இணையத்தில் தேவையான தகவல்களை, நொடிப்பொழுதில் தேடி பட்டியலிட்டு தருவது தேடுபொறிகள் என்பதை அனைவரும் அறிவோம். அலாவுதீன் அற்புத விளக்கு போன்று இந்த தேடுபொறிகள்( Search engine) இருக்கின்றன. தேவைப்படும் செய்தியை அறிய, இணையப்பயனாளர்கள், கீவேர்டை(keyword) டைப் செய்து ‘தேடு’ என்று கட்டளை கொடுத்ததும் நம் கண்களுக்கு முன்பாக, தேடு முடிவுகள் பட்டியலிடப்பட்டு இருக்கும். அங்கிருந்து நாம் செய்திகளைப் பெற்றுக்கொள்கிறோம்.
சரி, இப்போது உங்களுக்கு ஒரு சந்தேகம் தோன்றலாம். எப்படி இந்த தேடுபொறிகள் ஒரு வெப் பக்கத்திலிருக்கும் செய்திகளை சேகரித்து, அவைகளை வகைப்படுத்துகின்றன.இந்த கேள்விக்கு விளக்கத்தை காணும் முன்பு, ஒரு முக்கிய காரியத்தைப் பற்றி பார்ப்போம்.
முன்பு உள்ள வெளியிடுகளில் (Post) மக்கள் வரத்து என்றால் என்ன? உங்கள் இணையத்தளத்திற்கு அதை எப்படி பெறுவது என கூறியிருந்தேன். மக்கள் உங்கள் இணையத்தளத்தை பயன்படுத்த வேண்டுவதற்கே மக்கள்வரத்து தேவை. பயன்பாடு இருந்தாலே பணம். இதை ஆழமாக மனதில் பதித்து கொள்ளுங்கள்.மக்கள் வரத்தை பெறுவதற்கு பல வழிகள் உண்டு. அவைகளைப் பற்றி சுருக்கமாக முன்பு பார்த்தோம். தேடு பொறிகள் மூலம் மக்கள்வரத்தை (Search Engine Traffic) பெறுவது என்பது சிறந்த Idea! ஏனென்றால், தேடு பொறிகள் தரும் வரத்து, மிகவும் சரியான மக்கள்வரத்தை (highly targeted traffic) தரும் என்பதே! இதை விட சிறப்பம்சம் இது முற்றிலும் இலவசம். சிறந்த மக்கள்வரத்தை தரும், அதே சமயம் இலவசமாக கிடைக்கும் வசதியை உங்கள் பக்கம் வளைக்க வேண்டாமா? எனவே, இப்போதே இதற்கான வழிமுறைகளை செயல்படுத்த களத்தில் இறங்கத்தயாரகுங்கள்!இணையப்பக்கங்களில் இருந்து செய்திகளை திரட்டி அதை தேடுபொறிகளுக்கு அளிப்பது மெட்டா டேகுகள் தான். தேடுபொறிகள் உங்கள் இணையதளம் எதைப்பற்றியது என்பதை இந்த மெட்டாடேகுகளைகளில் இருந்து எடுத்துக்கொள்ளும். எனவே தேடு பொறிகளின் தேடுமுடிவுகளில் (search results) உங்கள் இணையதளம் இடம் பெற்றிருக்க உங்கள் மெட்டாடேகுகளை சீராக அமைந்திருக்க வேண்டும்.முதலில் இந்த மெட்ட டேகுகள் என்ன என்பதைப் பார்ப்போம். Meta என்ற வார்தை Meta Data என்ற வார்த்தையினால் இருந்து வந்தது. Meta data என்பதற்கு எல்லாவற்றையும் பற்றி செய்தி உள்ளடக்கிய செய்திப்பெட்டகம் என பொருள்படும்.
இப்பொது மெட்டா டேகின் அமைப்பு விதிமுறைகளை பார்ப்போம் ‘Meta Tag ’ என்பது எச்டிஎம்எல்லி டேகினுள் பயன்படுத்த வேண்டும். மெட்டா டேகிற்கு முடிவு டேக் அமைத்து தேவையில்லை.


eta tag யின் தோற்றம்
இதில் இரண்டு முக்கிய எலிமண்ட் (elements) உள்ளது.ஒன்று, name மற்றொன்று content என்பது என்ன மாதிரியான (வகையான அல்லது “எதற்காக?”) meta tag என்பதை குறிக்கும். NAME யிற்கு பின்பு வரும் ‘=’ சிம்பளை தொடர்ந்து, double quotation னிற்குள் வருவதுதான், அது என்ன META TAG என்பதை குறிக்கும். எடுத்து காட்டிற்கு மேல் உள்ள டேகில், இவ்வாறாக எளிதாக அமைக்கப்படக்கூடிய meta tag குகளால், தேடுபொறிகளுக்கு உங்கள் வெப்சைட்டிற்கு தெளிவான தகவல் கிடைக்கும். சரி, இனி ‘Description’ மற்றும் 'keyword' ஐ பற்றி பார்ப்போம்.
Description: தேடுபொறிகள் டிஸ்கிரிப்ஷனில் உள்ளவற்றையே அப்படியே, தனது தேடு முடிவுகளில் பட்டியலிடும். எனவே டிஸ்கிரிப்ஷனை நீங்கள் பயன்படுத்தாவிட்டால், உங்கள் வெப்சைட்டில் உள்ள முதல் சில வரிகளை பட்டியலிடும். எனவே டிஸ்கிரிப்ஷன் டேகை பயன்படுத்தி, மிகவும் முக்கியமான தகவலை content பகுதி தரவும்.
Keywords: தேடுபொறிகள் கீவேர்டுகளை மையமாக வைத்தே தேடுகின்றன என்று முன்பு பார்த்தோம். எடுத்துகாட்டிற்கு டயட்டிங் (dieting) பற்றி உங்கள் வெப்சைட் இருக்குமே ஆனால், healthy diet, diet to reduce your weight போன்ற கீவேர்டுகளைப் பயன்படுத்தலாம். எந்த மாதிரியான கீவேர்டுகளை பயன்படுத்தலாம், எந்தெந்த கீவேர்டுகள் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன என்பதை அறிய Google suggest என்ற சேவையை பயன்படுத்தலாம். இது மிகமிக பயனுள்ள தளம்.
இன்னும் சில மெட்டா டேகுகளையும் உங்கள் வெப்சைட்டில் பயன்படுத்தலாம். ஆனால் அவை மக்கள்வரத்தை பெற்று தருவதில்லை.
அவை:
1. Refresh - வெப்பேஜை refresh செய்ய உதவுகிறது
2. Copy right - காப்புரிமை பற்றி தகவல்களை தருவது
3.Author - ஆசிரியரைப்பற்றி தகவல்களை தருவது.
நீங்கள் கடைசியாக செய்ய வேண்டியது மேலே கூறியுள்ள விதிமுறைகளை கடைபிடித்து, மெட்டா டேகுகளுடன், தேடுபொறிகளுக்கு, உங்கள் வெப்சைட்டை சமர்பிக்கவும். தேடுபொறி, சிலந்திகள் உங்கள் வெப்சைட்டை விசிட் செய்து, தகவல்களை சேகரித்து, தனது தேடுபொறி முடிவுகளில் உங்கள் வெப்சைட்டை இடம்பெற செய்ய சிறிது காலம் ஆகும்.மெட்டா டேகுகளின்றி உங்கள் வெப்சைட்டுகளை தேடுபொறிகளுக்கு சமாப்பிக்காதீர்கள். மெட்டா டேகுகளை உண்டாக்க வேண்டுமா? அல்லது உங்கள் வெப்சைடில் அவை சரியாக அமைந்துள்ளதா என சரிபார்க்க வேண்டுமே? இங்கே கிளிக் செய்யவும்


துணுக்கு மூட்டை
கூகிள் தேடுபொறியில் Meta tags என்று டைப் செய்து தேடிப்பார்த்தால், வரும் உடனடி தேடுமுடிவுகளில், ‘மெட்டா டேகுகள் செத்துப்போய் விட்டன’ என திடீரென வந்து நிற்கும். ஒவ்வொரு தேடுபொறியும், ஒவ்வொரு மாதிரியான தேடு வழிகளைப் பின்பற்றுகின்றன. கூகிள் met tag குகளை தேடிப்பார்ப்பதில்லை. எனவே கூகிள் தேடுபொறி meta tag ஐ பயன்படுத்தாவிட்டால், அவை வீண் என்று நினைத்து விடாதீர்கள்.
இன்னும் எத்தனையோ முக்கிய தேடுபொறிகள், மேட்டா டெகுகளைப் பயன்படுத்துகின்றன. அவற்றுள் சில :
1. அல்டாவிஸ்டா

2. டையரைக்ட் ஹிட்
3. எக்ஸ்ஐட்
3. ஜாட்பாட்.

என்ன மெட்டா டேகுகளைப்பற்றி அறிந்து கொண்டீர்களா? இன்னும் meta tag குகளைப் பற்றி பல தகவல்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்.ஒரு செடியை நட்டு அதைச்சுற்றி கொத்தி உரமிடுவோம் அல்லவா? அதே போன்று ஒரு வெப்சைட்டையோ, பிலாகையோ உண்டாக்கி அதில் மெட்டா டேகை பயன்படுத்தி அதை செம்மையாக அமைத்தால் தேடுபொறிகளில் இருந்து ‘ஒகோ’ என மக்கள்வரத்து இருக்கும்.எனது அடுத்த போஸ்டில், பிலாக் வேட்டைக்கு தயாராக இருங்கள்.
இணையத்தின் பண மொழி!
வலைப்பதிவுகள் மூலம் பணம் சம்பாதிக்க புதிய முறை
வலைப்பதிவாளர்களுக்கு அறிவுச் சுரங்கம்
பிலாகுகளை அமைத்து பணம் பெறுவது எப்படி?
உங்கள் இணையத்திற்கு மக்கள் வரத்து!
முதலீடே இல்லாமல் லாபம் குவிக்கும் வேலை!

பிலாகுகளை அமைத்து பணம் பெறுவது எப்படி? How to make money with blogs?
அனுவைப்பிளந்து சக்தியை பயன்படுத்தும் இந்த நவீன காலத்தில், பிலாகுகளை நவீன வியாபார கருவியாக பயன்படுத்தி இணையத்தில் பொருட்களை விற்கும் அளவிற்கு காலம் மாறிவிட்டது. எனவே அப்படிப்பட்ட பிலாகுகளை எப்படி வாடிக்கையாளர்களை கவரும்படி அமைத்து பணம் பெறுவது என்பதை பற்றி பார்ப்போம்.

1. மக்கள் வாசிக்க விரும்புகின்றவைகளைப் பற்றி எழுதுங்கள் மக்களுக்குத் தேவையான, மக்கள் வாசிக்க விரும்புகிற காரியங்களைப் பற்றி உங்கள் பிலாகுகளில் எழுத வேண்டும். என்னதான் நல்ல பொருளுடைய பிலாகை நீங்கள் எழுதியிருந்தாலும் அவை இணையப்பயனாளர்கள் வாசிக்க விரும்புகிறவைகளாக இருந்தால்தான், உங்கள் பிலாகை அடிக்கடி விசிட் செய்வார்கள்.

2. தேடு பொறிகளின் தேடு முடிவுகளில் உங்கள் வெப்சைட்டை இடம் பெறச் செய்தல் ஒரு வெப்சைட்டிற்கு அதிகபட்ச மக்கள் வரத்தை அள்ளி தருவது தேடுபொறிகளால்தான். தேடுபொறி தேடுமுடிவுகளில் உங்கள் வெப்சைட் அல்லது பிலாகை இடம்பெறச் செய்வதால், கூடுதல் மக்கள் வரத்தைப் பெறலாம். தேடு முடிவுகளில் உங்கள் பிலாக் இடம் பெறச் செய்ய வைக்க இதோ எளிய டிப்ஸ்.

முதலில் தேடுபொறிகள் எந்த அடிப்படையில் வெப்சைட்டுகளை தேடுகின்றன என்பதைப் பற்றி பார்ப்போம்.எடுத்துக்காட்டிற்கு இணையப்பயனாளர் ஒருவர் tamil news என்று டைப் செய்து, இணையத்தில் உள்ள தமிழ் செய்தித்தளங்களைப் பற்றி அறிய விரும்புகிறார் என வைத்துக் கொள்வோம். அவர் டைப் செய்து, தேடு பொத்தானை அழுத்தியதும், தேடுபொறி என்ன செய்யும் தெரியுமா? மொத்த இணைத்தில் உள்ள இணையத்தளங்களில் “tamil news” என்ற சொற்கள் எங்கெங்கு இருக்கிறது என்று கண்டுபிடித்து தனது தேடு முடிவுகளில் தரும். எனவே தேடுபொறிகள் ஒரு வெப்சைட்டைப் பற்றி அறிய, அந்த வெப்சைட்டில் உள்ள “Keywords” ஐ பயன்படுத்துகின்றன. இப்பொழுது தமிழ் செய்திகளை பற்றி தரும் இணையப்பக்கங்களுள் உங்கள் வெப்சைட்டும் சேர வேண்டும் என்றால், உங்கள் வெப்சைட்டில் கண்டிப்பாக “tamil news” என்ற “Keyword” சேர்க்கப் பட்டிருக்க வேண்டும். தேடுபொறி தேடு முடிவுகளில் உங்கள் வெப்சைட் இடம்பிடிக்க செய்ய வேண்டுமானால் கீழே தரப்பட்டிருக்கும் எளிய வழிமுறைகளை கடைபிடிக்கலாம்.

<<>> நீங்கள் பயன்படுத்த திட்டமிட்டிருக்கும் “keyword” உங்கள் இணையதள முகவரியில் இடம் பெற்றிருக்குமாறு செய்து விடுங்கள். உணவுக்கட்டுப்பாடு (dieting) என்ற அடிப்படை keyword பயன்படுத்த நினைத்தால், உங்கள் இணையதள முகவரியை http://dietingdiet.blogspot.com/
<<>> உங்கள் அடிப்படை keyword ஐ உங்கள் பிளாக்கின் தலைப்பில் பயன்படுத்தவும். அடிப்படை கீவேர்டைத்தவிர்த்து இரண்டாம் தர keyword ஐ உங்கள் பிலாக்கின் செய்தி பகுதியில் பயன்படுத்தலாம்.

3. பிலாக் பெட்டகங்களுக்கு சமர்பித்தல் பிலாக்குகளை உருவாக்கி அவற்றை வெளியிட்டால் மட்டும் போதாது அவற்றை பிலாக் பெட்டகங்கள் என்றழைக்கப்படுகிற blog directories க்கு சமர்பிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் கூடுதலாக அங்கிருந்தும் உங்கள் பிலாகிற்கு மக்கள் வரத்தை பெற இயலும்.
மேலும் விபரங்களுக்கு:
Blog catalog
Globe of blogs
Google directory
Blog compendium
Blog directories in Yahoo!

4. பிலாக் இணைப்பகங்கள் உங்கள் பிலாக்கை அடிக்கடி அப்டேட் செய்யப்பட வேண்டும். அப்படி அப்டேட் செய்யப்பட்டவுடன், மற்ற பிலாக் பெட்டகங்களுக்கு இச்செய்தி அறிவிக்கப்பட வேண்டும். உங்கள் பிலாக் அந்த அளவிற்கு அடிக்கடி அப்டேட் செய்யப்படுகிறதோ, அந்த அளவிற்கு தான், உங்கள் பிலாக்கின் மதிப்பின் இருக்கும்.சரி, நீங்கள் அப்டேட் செய்த செய்தியை ஒவ்வொரு பிலாக் பெட்டகங்களுக்கும் சென்று கூற முடியாது. ஆனால் பிலாக் இணைப்பகங்கள் பயன்படுத்தி ஒரே இடத்தில் இருந்தவாறு, அவை அனைத்திற்கும் அப்டேட் செய்தியை அறிவிக்க முடியும்.

மேலும் விபரங்களுக்கு:
Ping 0 matic
Link referral
Ping goat

5. இணையத்தொடர்மற்ற வெப்சைட் அல்லது பிலாகுகளில் இருந்து எத்தனை இணைப்புகள் (Links) உங்கள் பிலாகிற்கு கிடைத்து இருக்கின்றது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். ஏனென்றால் இணைப்புகள் மூலம் உங்கள் பிலாகிற்கு மக்கள் வரத்து கிடைக்கும். மற்ற வெப்சைட்டுகள் மற்றும் பிலாகுகளில் இருந்து இணைப்பை பெறுவதற்கான சிறந்த வழிகள் :<<>> உங்கள் பிலாக்கைப் போன்ற பிற பிலாகுகளில் சென்று comments ஐ சொல்லாம்.
<<>> மற்ற பிலாகுகளுக்கு உங்கள் பிலாகுகளில் இணைப்பு ஏற்படுத்தவும் அவர்கள் உங்களுக்கு இணைப்பு தருவார்கள்.

மேலும் விபரங்களுக்கு:
Blog street
Tamil good sites
6. உங்கள் பிலாகுகளை சுற்றி ஒரு எதிர்பார்ப்பு அல்லது புரளியை ஏற்படுத்துதல் புரளி, காட்டுத் தீ போன்று பரவும் அல்லவா? உங்கள் பிலாகுகளைப் பயன்படுத்தி புரளியை ஏற்படுத்த கூறவில்லை. ஆனால் நீங்கள் உங்கள் பிலாகுகளில் புதிதாக, இன்னும் வெளிவராத செய்திகளை கூறும்போது உங்கள் பிலாகுகளைப் பற்றி செய்தி புரளி போல பரவி, மக்கள் வரத்தை பெறலாம்.இப்போதைக்கு மேற்கூறிய ஆறு வழிமுறைகளையும் செயல்படுத்த தொடங்குங்கள். உங்கள் பிலாகிற்கு மக்கள் வரத்தை பெறுங்கள்!உங்கள் முயற்சியில் முழு வெற்றி பெற வாழ்த்துவது ஜான் சாமுவேல்.எனது அடுத்த Post மெட்டா டேக்குகளை பயன்படுத்தி தேடுபொறி தேடுதல் முடிவுகளில் இடம் பெறுவதை பற்றி பார்ப்போம்.மேலும் விபரங்களுக்கு:

1. Seo Elite: New Seo Software!
2. Search Engine Optimization Seo Book. Seo Search Engine Rank Get Listed On Google Yahoo Msn.

நீங்கள் Internet ற்கு புதிதா? அப்படியென்றால் கீழே உள்ள முதல் வெளியீட்டில் (post) இருந்து வாசித்து வரவும்.

Other Useful Links:

வலைப்பதிவுகள் மூலம் பணம் சம்பாதிக்க புதிய முறை

வலைப்பதிவாளர்களுக்கு அறிவுச் சுரங்கம்

மெட்டா டேகுகள்

உங்கள் இணையத்திற்கு மக்கள் வரத்து!

முதலீடே இல்லாமல் லாபம் குவிக்கும் வேலை!
உங்கள் இணையத்திற்கு மக்கள் வரத்து! How to get traffic to blogs?
ஒரு சிறந்த, இணையப்பயனாளர்கள் எளிதாக புரிந்துக்கொள்ளக்கூடிய, வாசிதது ரசிக்கிற பிலாகை உண்டாக்கி விட்டீர்கள். நீங்கள் எழுதிய அந்த பிலாகில் A to Z அனைத்து தகவல்களும் அடங்கி உள்ளது. இப்பொழுது நீங்கள் எழுதிய பிலாகிற்கு மற்றவர்கள் வந்து வாசிக்க வேண்டும். இதையே Traffic என்று ஆங்கிலத்தில் கூறுகின்றனர்.
உலகின் தலைசிறந்த இணையப்பக்கமாக இருந்தாலும் அதற்கு மக்கள் வரத்து இல்லையென்றால் அந்த இணையதளம் வீணே!
ஏனெனில், மக்கள் வரத்து இருந்தால் மட்டுமே அவர்கள் உங்கள் இணையதளத்தை (பிலாகும், இணையதளம் போன்றது தான்!) பயன்படுத்த இயலும். பயன்பாடு இருந்தால் தான் உங்களுக்கு பணம் வரும்.
இணையதளத்திற்கு டிராப்பிக்கை, இவ்வாறு ஒப்பிடலாம். நான் ஒரு மளிகைக்கடை ஒன்றை புதிதாக தொடங்குகிறேன். சுற்றுவட்டாரங்களில் உள்ள மற்ற மளிகைக் கடைப்போன்று இல்லாமல், பொருட்கள் தரமானதாகவும், சரியான அளவிலும், வாடிக்கையாளரை நீண்ட நேரம் நின்று பொருட்களை வாங்குவதை தவிர்த்து நியாயமான விலையில் இருக்கும் படி அமைத்து விட்டேன். இப்படி நான் ஏற்பாடு செய்திருந்தும், வாடிக்கையாளர் என் கடைக்கு வரவில்லை.
ஏன்?
இந்தக் கேள்விக்கான பதில் மிகமிக எளிது. எனது கடையைப் பற்றி நான் விளம்பரம் செய்யவில்லை என்பது தான்! விளம்பரம் என்பதை மிகவும் தெளிவாக கூற வேண்டுமானால், மற்றவர்களுக்கு உங்கள் பொருட்களை, கூறுவது தான். கடைக்கு விளம்பரம் கொடுத்து மக்களை கடைக்கு வரவழைத்து, அவர்களை கவரும் படி கடை வியாபாரம் அமைந்தால், பின்பு அவர்கள் வாடிக்கையாக கடைக்கு வரச்செய்து வாடிக்கையாளர்களாக பெறமுடியும். இதிலிருந்து ஒன்று புரியும். உங்கள் கடைக்கு மக்கள் வரத்து இருந்தால் மட்டுமே, பணம் கிடைக்கும். இந்த கருத்து இணையதளத்தை வைத்து வியாபாரம் செய்வதற்கும், அப்படியே பொருந்தும்! எனவே சில அப்ளியேட் ப்ரோகிராம்களில் சேர்ந்து, அப்ளியேட் URL ஐ உங்கள் பிலாகுகளில் சேர்த்தால் மட்டும் போதாது. உங்கள் இணைய தளத்திற்கோ, பிலாகிற்கு, மக்கள் வரத்தை ஏற்படுத்த வேண்டும். மீண்டும் ஒருமுறை கூறுகிறேன், பிலாகும், ஒரு இணையதளத்திற்கு சமம். மக்கள் வரத்தை (Traffic) ஏற்படுத்த இரண்டு வழிகள் உண்டு.
ஒன்று, சிறிது பணம் செலவழித்து பெறலாம். இரண்டாவது வழி முற்றிலும் இலவசமானது.
இலவசமாக ஏனோ கிடைப்பதால், இதைப் பயன்படுத்தினால் பயன் இன்றும் கிடைக்காது என்று நினைத்து விடாதீர்கள். பணம் செலவழித்து மக்கள் வரத்தை பெறுவதைப் பற்றி பின்பு கூறுகிறேன்.
இப்பொழுது இலவசமாக மக்கள் வரத்தை தரக்கூடிய சிறப்பு அம்சங்கள் உடைய வெப்தளங்களைப் பற்றி பார்ப்போம்.
ஒரு Idea!
உங்களுக்கு Jack pot! (பண மழை) அடிக்க வேண்டுமா? நீங்கள் உங்கள் அப்லியேட் யு.ஆர்.ல்-ஐ(affiliate URL) இந்த தளங்களில் தரலாம். உங்கள் அப்லியேட் யு.ஆர்.ல்.யிற்கு மக்கள் வரத்து கிடைக்கும். அவர்கள் அந்த இணையத்தளத்தில் வாங்கினால், பணம் உங்கள் பாக்கெட்டிற்கு வரும். நீங்கள் வேறெதும் செய்ய வேண்டாம். உங்கள் அப்லியேட் யு.ஆர்.ல். ஐ இங்கு தரவும், பணம் தானாக வரும்.

Instant Buzz

உங்கள் இணையதள யு.ஆர்.ல்-ஐ தந்த சில நிமிடங்களில் உங்கள் இணையதளத்திற்கு அலைக்கடல்லென மக்கள் வரத்து இருக்கும். Instant buzz என்று பெயருக்கு ஏற்ப, உடனடியாக, உங்கள் வெப்தளத்தைப் பற்றி செய்தியை புரளி போன்று பரவ செய்து விடும். இலவச மக்கள் வரத்து சேவையைத் தரும் வெப்தளங்களில் முதன்மையானது. இவர்கள் தளத்தில் சென்று toll bar ஐ download செய்து கொள்ளவும். பின்பு எப்போதும் போல பிரவுஸ் செய்யவும். உங்கள் தளத்தை மற்றவர்களுக்கு காண்பிக்க பாயிண்ட்ஸ் தேவை. நீங்கள் பார்வையிடும் எந்த தளத்திற்கும் பாயிண்ட்ஸ் கிடைக்கும். இந்த சேவை முற்றிலும் இலவசம்.

Traffic swarm
தேனீக்கள் கூட்டம் போல மக்கள் வரத்து கிடைக்கும். இன்டர்நெட்டில் பிரபல மக்கள்வரத்தை தரும் சேவையைத் தருகிறது. பத்து URL வரை சேர்க்கலாம். மற்றவர்கள் வெப்சைட்டை பார்வையிட்டால் உங்களுக்கு பாயிண்ட்ஸ் கிடைக்கும்.

Link refferal
ஒரு account ஐ தொடங்கி, உங்கள் வெப்தளத்தை தரவும். உங்கள் வெப்தளத்திற்க வேறு வெப் தளங்களில் இருந்து இணைப்புகள் கிடைக்கும். மற்ற இணைய தளங்களில் இருந்து உங்கள் இணையதளத்திற்கு இணைப்பு (link) கிடைத்தால், தேடு பொறிகளில் உங்கள் வெப்சைட்டின் மதிப்பு கூடி, அவைகளில் இருந்து மக்கள் வரத்து கிடைக்கும்.

Free viral
நுண்கிருமிகளான வைரஸ், பாக்டீரியாக்கள் நிமிடத்திற்கு ஆயிரக்கணக்கில் பெருகுகின்றன. அதே போல் உங்கள் வெப்சைட்டிற்கு சுமார் ஒரு லட்சத்திற்கு மேலான மக்களை கொண்டு வர செய்ய முடியும். இது முற்றிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதுவும் ஒரு இலவச சேவையாகும்.
Other Useful Links:
வலைப்பதிவுகள் மூலம் பணம் சம்பாதிக்க புதிய முறை
வலைப்பதிவாளர்களுக்கு அறிவுச் சுரங்கம்
மெட்டா டேகுகள்
பிலாகுகளை அமைத்து பணம் பெறுவது எப்படி?
முதலீடே இல்லாமல் லாபம் குவிக்கும் வேலை!


முதலீடே இல்லாமல் லாபம் குவிக்கும் வேலை! How to make money without investment?
இன்டர்நெட்டில் மாதம் சுமார் ரூ.45,ooo/-சம்பாதிக்கலாம் என்றால் வியப்பாக உள்ளதா? ஆனால் உண்மை!
வெகுவாக வளர்ந்து வரும் இன்டர்நெட் பயன்பாடு, வாழ்க்கையின் அனைத்து தேவைகளையும், பூர்த்தி செய்யுமாறு அமைந்து விட்டது. இந்த இண்டர்நெட்டில், இப்பொழுது எல்லாம் மவுசை ஒரு தட்டு தட்டினால், உங்கள் போன் பில், மின்சார பில், இன்சூரன்ஸ் பிரிமியம் கூட கட்ட முடியும். ஏன், உங்கள் பிரியமானவர்களுக்கு அன்பளிப்பு ஒன்றை பல நூறு பொருட்களிரடயே தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு அனுப்ப முடியும்! இதற்கெல்லாம் காரணம் இன்டர்நெட் வழங்கும் எளிய பாதுகாப்பான பயன்பாட்டு அம்சங்கள் தான். இந்தக் காரணங்களால் இன்டர்நெட் பயன்பாடு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் பணம் சம்பாதிக்கும் வழியும் பன்மடங்கு அதிகரித்து உள்ளது.

சரி. இவைகயெல்லாம் o.k. விஷயத்துக்கு வாருங்கள் என்று கூறுவது எனக்கு கேட்கிறது.

இணையத்தில் சம்பாதிக்கும் வழிகளை பிரதானமாக இரண்டு வகைப்படுத்தலாம்.
(How to make money online?)

1. உங்கள் பொருட்களை எடுத்துக்காட்டுக்கு உங்களுடைய சாப்ட்வேர், புத்தகம் அல்லது வேறு எதுவாகவும் இருக்கலாம்) வெப்சைட்டில் வெளியிட்டு வியாபாரம் செய்யலாம்.

சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், உங்களுக்கென்று கடை (வெப்சைட்) ஒன்றை தொடங்கி அதில் உங்கள் பொருட்களை விற்பனை செய்வதற்கு சமம். உங்கள் பொருட்களை இன்டர்நெட்டில் (உங்கள் வெப்சைட்டில்) விற்பனை செய்வதில் சிறப்பு பயன்கள் உண்டு. உங்கள் வெப்சைட், ஒரு நாளைக்கு 24 மணி நேரமும், வாரத்திற்கு 7 நாட்களும் வேலை செய்யும். விடுமுறை என்பதே கிடையாது. எனவே யார் வேண்டுமானாலும், எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் வெப்சைட்டில் இருந்து பொருட்களை வாங்க முடியும். மேலும் ஒரு மிக முக்கியமான சிறப்பம்சம், எந்த நாட்டினரும், நீங்கள் விற்கும் பொருட்களை பெற முடியும். உங்கள் பொருட்களை உலகளாவிய அளவில் எடுத்துச் செல்ல இயலும்! உங்கள் வாடிக்கையாளர்களும் உலகளாவிய அளவில் இருப்பார்கள்.
2. மற்றவர்களின் பொருட்களை நீங்கள் விற்கலாம்.
நீங்கள் விற்பதற்கு உங்களுடைய சொந்த பொருட்கள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் நீங்கள் மற்றவர்களுடைய பொருட்களை விற்றுத் தரலாம். இதையே அப்பிளியேட் ப்ரோகிராம்ஸ் (Affiliate programs) என்று கூறுகிறார்கள். முதலில் நான் கூறிய வழிமுறையில், உங்களுக்கென ஒரு வெப்சைட் தொடங்குதல் என்பதற்கு உங்கள் வெப்சைட்டுக்கு பெயர் பதித்தல்(Domain name), வெப்சைட் உருவாக்குதல் (Web site designing), உங்கள் வெப்சைட்டை ஒரு சர்வரில் சேகரித்தல் (website hosting), உங்கள் வாடிக்கையாளரிடம் இருந்து பணம் பெறுவதற்கு வசதி என இவை அனைத்தையும் நிறுவ வேண்டும்.

இவையனைத்தையும் செய்வதற்கு நேரமும், பணமும் தேவை.

இரண்டாவது வழிமுறையானது, மிகவும் எளிதானது.

முதலீடே இல்லாமல் லாபம் குவிக்கும் வேலை என்றால் இந்த அப்பிளியேட் ப்ரோகிராமை (Affiliate program) கூறலாம்.

சரி, இந்த அப்ளியேட் ப்ரோகிராம் எவ்வாறு செயல்படுகிறது, உங்களுக்கு எப்படி பணம் கிடைக்கும் என்பதைப் பற்றி பார்ப்போம்.

முதலில் அப்ளியேட் ப்ரோகிராம் என்றவுடனே, இது ஏனோ சாப்ட்வேர் அல்லது கம்ப்பூயூட்டர் ப்ரோகிராம் (Computer programme) என்று நினைத்து விட வேண்டாம். திட்டம் என்பதையே, நான் இங்கு "program" என குறிப்பிட்டுள்ளேன். ஆனால் திட்டம் என்ற வார்த்தையின் சரியான ஆங்கிலச் சொல் programme என்பதே ஆகும். அமெரிக்க ஆங்கிலத்தில் programme என்ற சொல்லை பயன்படுத்தாமல் program என்றே பயன்படுத்தப்படுகிறது. இன்டர்நெட்டில் அமெரிக்க ஆங்கிலமே அதிகளவில் ஆதிக்கம் செய்கிறது.

அப்பிளியேட் ப்ரோகிராமின் (Affiliate program) செயல்பாடுகள் பற்றி பார்ப்போம்.
(How do affiliate programs work for you?)

முன்பு நான் குறிப்பிட்டிருந்தபடி மற்றவர்களுடைய பொருட்களை விற்று தருவதை அப்ளியேட் ப்ரோகிராம் என்று சுருக்கமாக கூறலாம். எடுத்துக்காட்டுக்கு, ஒரு குறிப்பிட்ட வெட்சைட்டில், உடல் எடையை எப்படி குறைக்க என்று ஒரு e-book ஐ விற்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். இப்பொழுது இந்த e-book விற்பதற்கு இரண்டு வழிகள் உண்டு. ஒன்று அவர்கள் வெப்சைட்டில் வைத்தே விற்கலாம். இரண்டாவது அப்பிளியேட் ப்ரோகிராம் ஐ ஏற்படுத்தி விற்கலாம். சரி இப்போதைக்கு இதைப்பற்றி பேசுவதை தற்சமயம் நிறுத்திக் கொள்வோம்.

நீங்கள் ஒரு அப்பிளியேட்(Affiliate) ஆக சேர விரும்பிய அந்த வெப்சைட்டில் அப்பிளியேட் ப்ரோகிராமின் வாய்ப்பைத் தர வேண்டும். உங்களைப் பற்றிய சில தகவல்களை (பெயர், இ-மெயில், விலாசம்) ஆகியவற்றை check அனுப்புவதற்கு கேட்பார்கள். இவற்றை நீங்கள் பூர்த்தி செய்தால் போதும், நீங்கள் அப்பிளியேட் ஆகி விடலாம். ஆனால் இதுவே முதற்படி.

அப்ளியேட் ப்ரோகிராம் மூலம் நீங்கள் எப்படி சம்பாதிக்கலாம்? நீங்கள் ஒரு அப்பிளியேட் ஆன பிறகு, உங்களுக்குகென ஒரு பிரத்யோக code ஒன்று வழங்கப்படும். கூடவே உங்கள் அப்பிளியேட் code-ஐ உடைய அப்பிளியேட் URL கிடைக்கும். இதையே அப்பியேட்டின் இணையப்பக்கம் எனப்படும்.

உங்களுடைய வேலை இப்போது என்ன?

உங்கள் வேலை மிகவும் சுலபம். உங்கள் அப்பிளியேட் URL- ஐ ஒரு Internet பயனாளர் கிளிக் செய்யும் போது உங்களுடைய அப்பிளியேட் URL தெரியும். அந்த இணையப்பக்கத்தில், அந்த பயனாளர் வாங்கினாலோ, புதியதாக signup எதுவும் செய்தாலோ, உங்களுக்கு குறிப்பிட்ட கமிஷன் தொகை கிடைக்கும். பெரும்பாலான அப்லியேட் புரோம்கிராம்ஸ் 50%முதல் 75% வரை கமிஷன் தருகிறார்கள். இது ஒவ்வொரு அப்லியேட் ப்ரோகிராமுக்கும் மாறுபடும்.

பணவேட்டையை எப்படி தொடங்குவது? (How to make money?)

உங்களது அப்பிளியேட் URL–ஐ இணைய பயனாளரை (Internet user) சென்றடையச் செய்ய வேண்டும் (அதை அவர்கள் கிளிக் செய்ய வேண்டும்). யாருமே அப்பிளியேட் URL ஐ பார்த்தவுடனே அதை கிளிக் செய்ய மாட்டார்கள்.
இணைய பயனாளர்கள் எங்கேயெல்லாம் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள், ஒரு பொருளைப் பற்றி அறிய எங்கே செல்கின்றனர் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். இன்று பெரும்பாலனோர் Blogs என்று சொல்லப்படுகிற personal டைரியை வாசிப்பதில் ஆர்வம் கொள்கின்றனர். இதென்னடா? மற்றவரிகளின் டைரியை வாசிப்பது என்று நீங்கள் நினைக்க வேண்டாம்.
Blog ல் உங்களது எண்ணங்களை, ஆசைகளை, பிரியங்கள், வெற்றிகள், தோல்விகள், அனுபவங்கள், அன்றாட வாழ்க்கை நிகழ்வுகள், கதைகள், அறிவியல், படித்தது, பார்த்தது, கலை, சரித்திரம் கேட்பது முதல் முகர்ந்தது தொட்டர், சுவைத்தது என்று எதையும் எழுதலாம். இதை நினைத்துப் பாருங்கள் உங்கள் எண்ணங்களை உலகமே வாசிக்கக் கூடிய சக்தி வாய்ந்த மீடியாவாக Blogs விளங்குவதை! இணைய பயனாளர்களில் blog readers அளவு கனிசமாக அதிக அளவில் உள்ளது. Blog readers உங்களுடைய பிலாகுகளை அதிகமாக மதிக்கிறார்கள்.

மற்றவர்கள் ஏன் உங்கள் பிலாகுகளை வாசிக்கிறார்கள் தெரியுமா?

உங்களுடைய கருத்துக்களை அறிய ஆர்வம் காட்டுகிறார்கள். நீங்கள் ஒரு காரியத்தையோ, பொருளைப்பற்றியோ கூறும் போது, நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள். அதை எப்படி பயன்படுத்தி கொண்டீர்கள், என்பதை அறிந்து கொள்ள வாசிக்கிறார்கள்.

இந்த blogகுகளை பணம் சம்பாதிக்க எப்படி பயன்படுத்துவது?

Blog குகளுக்கு நல்ல மார்க்கெட்டிங்(marketing) வலிமை உண்டு.
சந்தையில் விற்பனையில் Blog-களின் வெற்றியை அறிய விரும்புகிறீர்களா?
செல்போன் விற்பனையிலும், தரத்திலும் கொடி கட்டி பறக்கும் நிறுவனம் NOKIA, தற்போது ஒரு புதிய மார்க்கெட்டிங் யுக்தியை பயன்படுத்தியது.

NOKIA நிறுவனம் இன்டர்நெட்டில் survey நடத்தும் ஒரு பிரபல நிறுவனத்தின் மூலம், செல்போன்களைப் பற்றி எழுதும் blog writers(blog எழுதுவோரிடம்), புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட NOKIA N SERIES செல்போன்களை இலவசமாக வழங்கியது.
இந்த blog எழுத்தாளர்கள், செல்போன்களை பயன்படுத்தி அதில் உள்ள சிறப்பு அம்சங்கள் முதலியவற்றை தங்கள் blog களில் எழுதுபவர்கள். இவர்கள் ஒவ்வொரு செல்போனையும் பயன்படுத்தி பார்த்து அதில் உள்ள நிறைவு, குறைகளை கூறுவதால், மக்கள் இவர்களின் blog குகளை வாசித்து பார்த்து செல்போன் வாங்கும் அளவிற்கு நிலமை மாறிவிட்டது. சந்தையில் புதிதாக அறிமுகம் செய்யப்பட உள்ள புதிய NOKIA N SERIES இவர்கள் கைகளில் கிடைத்தால் சும்மாவா இருப்பார்கள்? அதைப் பயன்படுத்தி “எழுதி தள்ளிவிட்டார்கள்". கொஞ்ச நாட்களில் NOKIA N SERIES மிகவும் பிரபலமடைந்துவிட்டது. NOKIA நிறுவனத்திற்கும் கூடுதலாக விற்பனை கிடைத்தது. இன்றைய நவீன யுகத்தில் பிலாக்குகள் ஒரு புதிய மார்க்கெட்டிங் tool ஆக மாறிவிட்டது.

இதுவரை நான் கூறிய வழிமுறைகள் வியப்பாக உள்ளதா? இனி நான் கூறப்போகும் பணம் சம்பாதிக்கும் வழிமுறை இன்னும் உங்களை வியப்பில் ஆழ்த்தப் போகிறது!!

Blog குகளை வைத்து பணம் சம்பாதிக்க இதோ எளிய வழிகள். (How to make money with your blogs?)

நான் கூறியிருக்கும் ஒவ்வொரு முறையையும் (steps) செயல்படுத்த வேண்டும். “கூரையைப் பிய்த்துக் கொண்டு பணம் வரும்” என்றெல்லாம் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் நான் இங்கு கூற போகும் வழிமுறைகளை அப்படியே பின்பற்றினால் உங்கள் blog குகளில் இருந்து பணம்(money!) பிய்த்துக் கொண்டு வரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

1. உங்களுக்கென ஒரு blog ஐ உருவாக்கி கொள்ளுங்கள் http://www.blogger.com/ என்ற இணையத்தளத்திற்கு சென்று உங்களுக்கு என்று இதுபோல் ஒரு blog ஐ உருவாக்கி கொள்ளவும். blog ஐ உண்டாக்குவது மிகவும் எளிது.

உங்களுடைய user name, password ஐ தேர்வு செய்து தேவையான இடத்தில் type செய்யுங்கள். user name, password யும் எழுதிக் கொள்ளவும். அடுத்தது உங்கள் blog யின் பெயரை தேர்ந்தெடுக்கவும்.எடுத்துக்காட்டுக்கு நீங்கள் உடல்நலத்தைப் பற்றி எழுத திட்டமிட்டு இருந்தால் உங்கள் blog யின் பெயர் http://dietingdiet.blogspot.com என்று தேர்வு செய்யலாம். இதில் dietingdiet தான் உங்கள் blog யின் பெயர்.

2. உங்கள் blog கிற்கு தேவையான template ஐ தேர்ந்தெடுக்கவும். Template என்பது ready made ஆக இருக்கும் blog டிசையின் ஆகும். உங்களுக்குப் பிடித்த, உங்கள் blog பொருளுக்கு ஏற்ப தேர்ந்தெடுக்கவும்.

3. Blog title என்ற இடத்தில், உங்கள் blog எதைப்பற்றியது என சுருக்கமாக, முக்கியமான தகவலை டைப் செய்யுங்கள். அவ்வளவு தான் உங்கள் blog create ஆகிவிட்டது.

4. Create a new post ஐ கிளிக் செய்து உங்கள் புதிய blog ஐ தொடங்கவும். Blog headline என்பதில் நீங்கள் எழுதப் போகும் கட்டுரையின் தலைப்பைத் தரலாம்.

5. பின்பு கொடுக்கப்பட்டிருக்கும் இடத்தில் உங்கள் கட்டுரையை டைப் செய்து publish பொத்தானை அழுத்தினால் போதும், உங்கள் blog publish ஆகியிருக்கும். நீங்கள் உங்கள் blog ஐ தமிழில் உருவாக்க நினைத்தால், MS - WORD போன்ற text editor களில் டைப் செய்து அதை காப்பி (copy) செய்து http://www.suratha.com/unicode.htm வந்து paste செய்யவும் (This converts your text into unicode and blogger supports only unicode! and you can easily paste the text from there, straight away to your blog).

6. மற்றவர்களுடைய பொருட்களை விற்று தருவதுதான் affiliate program என்று கூறி இருந்தேன். நீங்கள் விற்று தந்தால் உங்களுக்கு 50% முதல் 75% கமிசன் கிடைக்கும். எப்படி affiliate program களில் சேருவது என்று முன்பு கூறியுள்ளேன். அதை வாசியுங்கள். Clickbank என்பது இன்டர்நெட்டின் மிகப்பெரிய மற்றும் சிறப்பான affiliate program வாய்ப்பை தருகிறார்கள். Clickbank என்பது பொருட்களை விற்பதற்கும் , வாங்குவதற்கும் ஏற்ற இடம். உங்களுக்கென ஒரு clickbank account ஐ www.clickbank.com என்ற இணையதள பக்கத்தில் தொடங்கவும். இது முற்றிலும் இலவசம்! உங்களுடைய பெயர் விலாசம், இ-மெயில் அட்ரஸ் ஆகியவற்றை தர வேண்டும். உங்கள் கமிஷன் தொகையை check ஆக நீங்கள் தரும் முகவரிக்கு அனுப்புவார்கள். உங்கள் clickbank nick name, password ஐ எழுதி வைத்துக் கொள்ளவும்.

7. இப்பொழுது http://www.clickbank.com/ என்ற இணையதளத்திற்கு செல்லவும். அதில் “Market place” என்ற Tab ஐ click செய்யவும். அதில் products வெவ்வேறாக பிரித்து தரப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டுக்கு பொருட்களை Health(உடல்நலம்) Bussiness(வியாபாரம்) women's products(பெண்களுக்கான பொருட்கள்) என்று இன்னும் பல தலைப்புகளில் வெளியிடப்பட்டு இருக்கும். இந்த தலைப்புகளை கிளிக் செய்தால், அந்தந்த தலைப்புகளில் உள்ள products வரிசையாக பட்டியலிடப்பட்டு இருக்கும். வரிசைப்படுத்தப்பட்டு உள்ள ஒவ்வொரு தலைப்பின் அருகிலும், அந்த பொருட்களை விற்று தந்தால் எவ்வளவு சதவீதம் கமிஷன் என்று இவ்வாறாக இருக்கும் - (75%) அதை கிளிக் செய்யவும். புதியதாக open ஆகும் window வில் உங்கள் clickbank nick name (நீங்கள் clickbank affiliate ஆக பதிவு செய்த பெயரை தரவம்). Submit பட்டனை கிளிக் செய்யவும். இப்போது clickbank hop link ஒன்று வரும். அதைக் காப்பி செய்து கொள்ளவும்.

8. காப்பி செய்த hop link ஐ, உங்கள் blog யில் paste செய்யவும்.நீங்கள் உடல் எடையை எப்படி குறைப்பது என்று ஒரு blog எழுதினால், உடல் எடையைக் குறைக்கக் கூடிய பொருட்களைத் தேர்ந்தெடுத்து hop link ஐ உங்கள் blog யில் paste செய்யவும்.இந்த hop link(your affiliate link) ஐ சரியான இடத்தில் paste செய்யவும்

9. இப்பொழுது உங்கள் blog சரியாக அமைக்கப்பட்டுள்ளது. இன்டர்நெட் பயனாளர் ஒருவர் உங்கள் affiliate link ஐ கிளிக் செய்தால், அந்த web page open ஆகும். பயனாளர் அந்த web pages யில் பொருளை வாங்கினால், உங்கள் account யில் கமிசன் வரும்

10. Clickbank யில் இல்லாத வேறு சில affiliate program கள் உள்ளன. அவற்றுள் சிலவற்றை இங்கு பார்ப்போம.

1. Evidence eliminator இன்றைய நாட்களில், இன்டர்நெட்டில், இரகசியம் (Privacy) மிகவுமும் குறைந்து போய் உள்ளது. நாம் எந்த எந்த இணையதளங்களை பார்வை இடுகிறோம்? என்பது நமது கம்ப்யூட்டரின் hard disk ல் பதிவு செய்யப்படும். இந்தப் பதிவு நாம் hard disk ஐ format செய்தாலும் அழிவதில்லை. எடுத்துக்காட்டுக்கு ஒருவர் வேலை நேரத்தில் இன்டர்நெட் வசதி கொண்ட தன் அலுவலக கம்ப்பூயூட்டரில் ஆபாச வெப் தளங்களை பார்வையிடுகிறார். இந்த செய்தி (data) அந்தக் கம்ப்யூட்டரின் hard disc கில் நிரந்தரமாக பதியப்படும். அந்த ஊழியரின் மேல் அதிகாரி அந்த கம்ப்யுட்டரை சோதித்தால் உண்மை வெளிப்பட்டு விடும். எனவே இது மாதிரியான செய்திகளை (data) அழிக்க பயன்படுத்துவதே evidence elimiator என்ற சாப்ட்வேர் ஆகும். இது அமெரிக்க ஐக்கிய நாட்டின் நீதிமன்றத்தில் நிறுபனம் செய்யப்பட்டுள்ளது.மக்கள் இந்த சாப்ட்வேரை வாங்கி தங்களை பாதுகாத்துக் கொள்கிறார்கள். அதிக அளவில் இந்த சாப்ட்வேர் விற்பனையாகிறது.இவர்கள் affiliate programe வாய்ப்பை தருகிறார்கள்.

சந்தையில் நன்றாக விற்கக் கூடிய software ஆக இருப்பதால் இதை விற்று நல்ல கமிசன் பெறலாம். இந்த affiliate program மூலம் நீங்கள் மாதம் $10,000 சம்பாதிக்க முடியும். நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்

<<>> இங்கே கிளிக் செய்து evidence eliminator சேரவும் இது முற்றிலும் இலவசம். யாருக்கும் எந்தப் பணமும் கட்டத் தேவையில்லை. அவர்கள் உங்களுக்கு பணம் தர விரும்புகிறார்கள்.

<<>> உங்களுக்கென ஒரு user name, paypal account உருவாக்கிக் கொள்ளவும்.Paypal மூலமாகவே உங்களுக்கு commission தொகை கிடைக்கும்.

<<>> அவர்கள் தரும் affiliate code ஐ உங்கள் வெப்சைட்டில் சேர்க்கவும். அதைப்பற்றி எழுதுங்கள். Affiliates இந்த softawre ஐ இலவசமாக download செய்து பயன்படுத்தி பார்த்து அதைப்பற்றி எழுதலாம்.

2. Affiliate Cash vault. Click here to earn multiple streams of income!

3. The rich jerk

4. Make easy money at home typing data! No.1 home typing job!

5. ? 15min to $1000+ per week ?

இந்த கட்டுரையைப்பற்றிய உங்கள் கருத்துக்களை comments என்ற tab ஐ கிளிக் செய்து தெரியப்படுத்தினால், உங்கள் blog யிற்கு, இங்கிருந்து ஒரு link கிடைக்கும்.
எனது அடுத்த post யில் நீங்கள் ஏற்படுத்திய blog யிற்கு எப்படி மக்களை வரவழைத்து (Traffic to your blogs), உங்கள் blog ஐ பயன்படுத்த செய்ய வேண்டும் என்பதைப் பற்றி பார்ப்போம். வாழ்த்துக்கள்!!
வலைப்பதிவுகள் மூலம் பணம் சம்பாதிக்க புதிய முறை
வலைப்பதிவாளர்களுக்கு அறிவுச் சுரங்கம்
மெட்டா டேகுகள்
பிலாகுகளை அமைத்து பணம் பெறுவது எப்படி?
உங்கள் இணையத்திற்கு மக்கள் வரத்து!

No comments: